அரியலூர் அருகே சாலைப் பணி அதிகாரிகளை முற்றுகையிட்ட மக்கள்.

அரியலூர் அருகே சாலைப் பணி அதிகாரிகளை முற்றுகையிட்ட கிராம மக்கள்.

202

அரியலூர் அருகே சாலைப் பணி அதிகாரிகளை முற்றுகையிட்ட கிராம மக்கள்.

Villagers blockade road work officers near Ariyalur.

அரியலூா் மாவட்டம், சென்னிவனம் கிராமத்தில் நடைபெற உள்ள சாலைப் பணிகளை ஊராட்சி வசம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி, அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை கிராம மக்கள் சனிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சென்னிவனம் கிராமத்தில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் இரண்டு மெட்டல் சாலைகளும், ஒரு சிமென்ட் சாலையும் போட அளவீடு செய்ய ஊராட்சி ஒன்றியத்திலிருந்து அதிகாரிகள் சிலா் சனிக்கிழமை சென்னிவனம் கிராமத்துக்குச் சென்றனா்.

அப்போது அங்கு கூடியிருந்த கிராம மக்கள், இந்த சாலைப் பணிகளை ஊராட்சி வசம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி அதிகாரிகளை முற்றுகையிட்டனா். இதனால், அளவீடு செய்யாமலே அதிகாரிகள் திரும்பினா். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

tags: ariyalur

gulf tami news
Leave a Reply

%d bloggers like this: