two-women-abducted-near-jayankondam?

ஜெயங்கொண்டம் அருகே இரண்டு பெண்கள் கடத்தலா? காவல்துறை விசாரணை.

297

ஜெயங்கொண்டம் அருகே இரண்டு பெண்கள் கடத்தலா? காவல்துறை விசாரணை.

ஜெயங்கொண்டம் அருகே வாரியங்காவல் கிராமம் திடீர் குப்பத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் ராஜேஸ்வரி தம்பதியின் மகள் கீர்த்தனா (வயது 19). பெரம்பலூரில் உள்ள கல்லூரியில் டிப்ளமோ பார்மசி முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கொரோனா தொற்றின் ஊரடங்கின் காரணமாக கல்லூரி மூடப்பட்டதை தொடர்ந்து வீட்டில் இருந்துள்ளார்.

நேற்று முன்தினம் (சனிக்கிழமை) வீட்டிலிருந்து வெளியே சென்றவர் திரும்ப வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடிப் பார்த்தும், கீர்த்தனா குறித்து எந்த தகவலும் கிடைக்காததை அடுத்து, அவரின் தாயார் ராஜேஸ்வரி ஜெயங்கொண்டம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.

[the_ad id=”7251″]

இதே போல ஜெயங்கொண்டம் அருகே உள்ள கொடுக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் தாமரைச் செல்வி. இவரது மகள் அஞ்சு (வயது 20). இவரது கணவர் அருள் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இதனால் அஞ்சு தனது தாய் வீடான கொடுக்கூரில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் அஞ்சுவும், அவரது அக்கா சூர்யாவும் சேர்ந்து பொருட்கள் வாங்க ஜெயங்கொண்டம் வந்துள்ளனர். பின்னர் மீண்டும் ஊருக்கு திரும்ப ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளனர். அஞ்சு கழிவறைக்கு சென்று வருவதாக கூறி சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் திரும்பவில்லை. இதனால் உறவினர்கள், தோழிகள் வீடுகள் என பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் மஞ்சுவின் தாய் ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

புகாரின் பேரில் அஞ்சு கடத்தப்பட்டாரா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

[the_ad id=”7250″]




Leave a Reply

%d bloggers like this: