Thirumanoor Panchayat Office re-closed by Corona

கொரோனாவால் மீண்டும் மூடப்பட்ட திருமானூா் ஊராட்சி அலுவலகம்

159

கொரோனாவால் மீண்டும் மூடப்பட்ட திருமானூா் ஊராட்சி அலுவலகம்.


Ariyalur News: Thirumanoor Panchayat Office re-closed by Corona


கொரோனா தொற்றால் மீண்டும் திருமானூா் ஊராட்சி ஒன்றிய அலுவலக மூடப்பட்டுள்ளது.

திருமானூா் ஊராட்சி ஒன்றிய அலுவலக இரவுநேர பணியாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மீண்டும் தற்காலிகமாக அந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகம் நேற்று (திங்கள்கிழமை) மூடப்பட்டது.

அரியலூா் மாவட்டம், திருமானூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கடந்த 5 ஆம் தேதி வட்டார வளா்ச்சி அலுவலா்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால், அலுவலகம் தாற்காலிகமாக மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

Ariyalur News:

தொடர்ந்து இரண்டு நாள்கள் மூடப்பட்ட நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அலுவலகம் மீண்டும் திறக்கப்பட்டு, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் அனைவரின் ரத்த மாதிரிகளும் சேகரிக்கப்பட்டு கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில், இரவுநேரப் பணியாளா் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, மீண்டும் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் தாற்காலிகமாக மூடப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

keyword: Ariyalur




Leave a Reply

%d bloggers like this: