திருமணமாகாத விரக்தியில் தந்தையை அடித்து கொலை செய்த மகன். son beat his father

திருமணமாகாத விரக்தியில் தந்தையை அடித்து கொலை செய்த மகன்

373

திருமணமாகாத விரக்தியில் தந்தையை அடித்து கொலை செய்த மகன். son beat his father

son beat his father and killed him in despair

ஜெயங்கொண்டம் அருகே திருமணமாகாத விரக்தியால் மகன் தந்தையை மண்வெட்டியால் அடித்து கொலை செய்து தப்பி ஓடிய மகனை காவலர்கள் தேடி வருகின்றனர். son beat his father

ஜெயங்கொண்டம் அருகே உள்ள கொங்கு நாட்டார் குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி (65) விவசாயக் கூலித் தொழிலாளி. இவருக்கு மூன்று மகன்களும் உள்ளனர். மூத்த மகன் ஒருவருக்கும் இரண்டு மகள்களுக்கும் திருமணம் செய்து வைத்துள்ளார்.

இந்நிலையில் மூத்த மகனுக்கு அடுத்த இரண்டு மகன்களுக்கும் திருமணம் செய்து வைக்க சக்கரவர்த்தியால் முடியவில்லை. மூன்றாவது மகன் கலியமூர்த்தி (35) இவர் வெல்டிங் வேலை கூலித்தொழில் செய்து வருகின்றார். கூலியாக கிடைக்கும் பணத்தை அவ்வப்போது மது குடிப்பதற்கு செலவு செய்து விடுகிறார்.

அரியலூர் அருகே VAO வை மிரட்டிய வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது.

இந்நிலையில் தனக்கு திருமணம் செய்து வைக்கக்கோரி தந்தையிடம் தகராறு செய்து வந்துள்ளார். நேற்று இரவு வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த போது திண்ணையில் தந்தை சக்கரவர்த்தி படுத்திருந்தார். அவரிடம் கலிய மூர்த்தி தகராறு செய்துள்ளார்.

சக்கரவர்த்திக்கும் கலியமூர்த்தி வாக்குவாதம் அதிகமாக அருகில் கிடந்த மண்வெட்டியை எடுத்து சக்கரவர்த்தியை மகன் கலியமூர்த்தி தாக்கியுள்ளார் இதில் தலையில் பலத்த அடிபட்டு சக்கரவர்த்தி சம்பவ இடத்திலேயே துடி துடித்து இறந்தார். இது குறித்து ஆண்டி மடம் காவலர்கள் தப்பி ஓடிய மகன் கலியமூர்த்தியை தேடி வருகின்றனர்.

tags: tamil news

gulf tamil news
Leave a Reply

%d bloggers like this: