சமூக சேவகர் விருது பெற அரியலூர் மாவட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம்

சமூக சேவகர் விருது பெற அரியலூர் மாவட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம்

116

சமூக சேவகர் விருது பெற அரியலூர் மாவட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம் | perambalur news

சமூக சேவையாற்றி வரும் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த பெண்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Ariyalur district women can apply for best social worker award.

இதுக்குறித்து அவர் வெளியிட்டு செய்திக்குறிப்பு: வரும் ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி சுதந்திர தினத்தன்று பெண்களுக்கான சிறந்த சமூக சேவகர் விருது வழங்கப்படுகிறது. இந்த விருதினை பெறுவதற்கு தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

சமூகநலனை சார்ந்த நடவடிக்கை மேற்கொண்ட சமூக சேவகர் விண்ணப்பிக்கலாம். பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் சமூக சேவை நிறுவனங்கள் அரசு அங்கீகாரம் பெற்று இருக்க வேண்டும். perambalur news

மீண்டும் அனைத்து மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு? முதல்வர் யோசனை!

வௌவால்களால் கொரோனா பரவுகிறதா!

விண்ணப்பதாரர் பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பாக சேவை புரிந்த விவரம் ஒரு பக்க அளவில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அனுப்ப வேண்டும். விண்ணப்பதாரரின் கருத்துரு தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடனும் அனுப்ப வேண்டும். அதற்கான விண்ணப்பம் நாளை (வியாழக்கிழமைக்குள்) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டுவரும் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

tags: ariyalur
Leave a Reply

%d bloggers like this: