அரியலூர் அருகே தனியார் பேருந்துக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு கொடுத்த மக்கள்

343

அரியலூர் அருகே தனியார் பேருந்துக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு கொடுத்த மக்கள்

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கரைவெட்டி புதூர் கிராமத்தில் கடந்த 3 மாதங்களாக தனியார் பேருந்துகள் இயக்கப்படாததால் கிராம மக்கள் அவதிப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் தமிழக அரசு, தனியார் பேருந்துகளை இயங்க அனுமதி அளித்தது. அதனையடுத்து நேற்று முதல் பேருந்துகள் இயங்கலாம் என அறிவிப்பு வெளியான நிலையில், கரைவெட்டி புதூர் கிராமத்திற்குப் பேருந்து இரவு முதல் இயங்கியது.

மூன்று மாதமாக அவதிப்பட்டு வந்த கிராம மக்களுக்குப் பேருந்து வந்தது பெரும் மகிழ்ச்சியை அளித்தது. இன்று காலை தங்களது ஊருக்கு வந்த பேருந்துக்கு கரைவெட்டி புதூர் கிராம மக்கள் சார்பாக மலர் தூவி ஆரத்தி எடுத்து, ஓட்டுநர் நடத்துனருக்கு பூங்கொத்துக் கொடுத்து கற்பூர தீபம் ஏற்றி, நோயெதிர்ப்பு ஆற்றலைப் பெருக்க உதவும் எலுமிச்சை, இஞ்சி கலந்த சாறு வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டது.

[the_ad id=”7251″]

தங்களது உயிரைப் பணயம் வைத்துப் பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர், நடத்துனர் மற்றும் எங்களை ஏற்றிச் செல்லும் பேருந்தை உயிருள்ள உயிரினம் போன்றே கருதி மலர் தூவி, கற்பூரத்தைக் காண்பித்து, ஆரத்தி எடுத்து மரியாதை செலுத்தியதாக கரைவெட்டி புதூர் கிராம மக்கள் கூறியது அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்தது.

[the_ad id=”12149″]

 

[the_ad_placement id=”after-content”]
Leave a Reply

%d bloggers like this: