போட்டி தேர்விற்கு இணையவழி பயிற்சி வகுப்பு: அரியலூர் ஆட்சியர் ரத்னா

181

போட்டி தேர்விற்கு இணையவழி பயிற்சி வகுப்பு: அரியலூர் ஆட்சியர் ரத்னா.

அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்பட்டதில் பலர் பயனடைந்துள்ளனர்.

இந்த அலுவலகத்தில் மாணவர்கள் பயில்வதற்கு ஏற்றவகையில் அமைதியான சூழல், காற்றோட்டமான இடவசதி மற்றும் அனைத்து வகையான போட்டி தேர்வுகளுக்குமான புத்தகங்களுடன் நூலகமும் செயல்பட்டு வருகிறது. பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு இலவச பாடகுறிப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.

[the_ad id=”7251″]

தற்போது கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் நடைபெற்று வந்த நேரடி பயிற்சி வகுப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் கடந்த மாதத்தில் இருந்து இணையவழி இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

எனவே இணையவழி இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மாணவர்கள் தங்களது வாட்ஸ் அப் வசதியுடன் கூடிய தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியுடன் அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தின் தொலைபேசி எண் 04329-228641 அல்லது செல்போன் எண் 9994171306 என்ற எண்களில் தொடர்பு கொண்டு பயிற்சி வகுப்புகள் குறித்த விவரத்தினை அறிந்து இணையவழி இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அரியலூர் ஆட்சியர் ரத்னா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

[the_ad id=”12149″]

[the_ad id=”7252″]
Leave a Reply

%d bloggers like this: