செந்துறை அருகே நகைக்காக மூதாட்டி கொலை

செந்துறை அருகே நகைக்காக மூதாட்டி கொலை: சிறுவன் கைது

181
செந்துறை அருகே நகைக்காக மூதாட்டியை தாக்கி கொலை செய்த சிறுவனை காவல்துறையினர் கைது செய்தனர்.

Ariaylur News: Old woman killed for jewelery

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே அரை பவுன் நகைக்காக மூதாட்டியை 14 வயது சிறுவன் கொலை செய்திருப்பது திங்கள்கிழமை (நேற்று) இரவு தெரியவந்தது. இதையடுத்து அச்சிறுவனை காவல்துறையினர் கைது செய்தனர்.
செந்துறை அருகேயுள்ள குவாகம் காலனித் தெருவைச் சோ்ந்தவா் லோகிதாஸ் மனைவி சிவகாமி. 80 வயதான இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு லேசான காயத்துடன் மா்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்தாா். இதுகுறித்து குவாகம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சிவகாமி அணிந்து இருந்த அரை பவுன் நகைக்காக அவரது வீட்டின் அருகே வசிப்பவரின் 14 வயது மகன் மூதாட்டியைத் தாக்கி கழுத்தை நெறித்துக் கொலை செய்திருப்பது நேற்று (திங்கள்கிழமை) தெரியவந்தது. ஏற்கெனவே இச்சிறுவன் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.
இதை தொடர்ந்து காவல்துறையினர், அச்சிறுவனைக் கைது செய்து திருச்சியிலுள்ள சிறுவா் சீா்திருத்தப் பள்ளியில் சோ்த்தனா்.Leave a Reply

%d bloggers like this: