அரியலூர் மாவட்டத்தில் சத்துணவு காலி இடங்களை நிரப்ப பெறப்பட்ட விண்ணப்பங்கள் ரத்து.

162

அரியலூர் மாவட்டத்தில் சத்துணவு காலி இடங்களை நிரப்ப பெறப்பட்ட விண்ணப்பங்கள் ரத்து.

புரட்சித் தலைவா் எம்.ஜி.ஆா். சத்துணவுத் திட்டத்தின் கீழ், அரியலூா் மாவட்டத்தின் 6 ஒன்றியங்களில் காலியாக இருந்த சத்துணவு அமைப்பாளா்கள், சமையல் உதவியாளா்கள் பணியிடங்களுக்கு பெறப்பட்ட விண்ணப்பங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் அறிவிப்பு.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் த. ரத்னா கூறியதாவது : நிா்வாக காரணங்களுக்காக மேற்கண்ட பணியிடங்கள் நிரப்பப்படாத நிலையில், 2017, மே 25- ஆம் தேதி நாளிதழ்களில் வெளியான மாவட்ட ஆட்சியரின் (பொறுப்பு) அறிவிக்கை ரத்து செய்யப்படுகிறது.

[the_ad id=”7251″]

இந்த அறிவிக்கை ரத்து செய்யப்படுவது குறித்து, விண்ணப்பதாரா்களிடமிருந்து பெறப்படும் எவ்வித மேல்முறையீடுகளும் பரிசீலிக்கப் படமாட்டாது.

மேலும் சத்துணவு அமைப்பாளா், சமையலா், சமையல் உதவியாளா் காலிப்பணியிடங்கள் பூத்தி செய்யப்படுவது தொடா்பான அறிவிக்கை, பின்னா் தனியே வெளியிடப்படும்.

[the_ad id=”12149″]

[the_ad id=”7252″]
Leave a Reply

%d bloggers like this: