தா.பழூர் அருகே வாலிபரை கத்தியால் குத்திய ஒருவர் கைது.

328

தா.பழூர் அருகே வாலிபரை கத்தியால் குத்திய ஒருவர் கைது.

தா.பழூர் அருகே உள்ள தோப்பு தெருவைச் சேர்ந்தவர் பெரியசாமி மகன் ரஞ்சித் (19). கூலித் தொழிலாளியான இவர் நேற்று தனது வீட்டில் இருந்த போது அங்கு வந்த ஒரு பகுதியை சேர்ந்த 17 வயது உடைய ஒரு சிறுவன், கௌதமன் (22), சண்முகராஜா (21) ஆகிய 3 பேரும் தகாத வார்த்தைகளால் திட்டிக் கொண்டிருந்தனர்.

[the_ad id=”7251″]

அப்போது வெளியே வந்த ரஞ்சித் அவர்களை தட்டிக் கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த 17 வயது உடைய அந்தச் சிறுவன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ரஞ்சித்தை குத்திவிட்டார். மற்ற 2 பேரும் ரஞ்சித்தை தாக்கிவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர். இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் ரஞ்சித்தை மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சண்முக ராஜாவை கைது செய்தனர் மேலும் தலைமறைவாக உள்ள மற்ற இருவரையும் தேடி வருகின்றனர்.

[the_ad id=”7250″]
Leave a Reply

%d bloggers like this: