ஜெயங்கொண்டத்தில் ஓட்டுநர் இல்லாமல் தானாக ஓடிய லாரி.

ஜெயங்கொண்டத்தில் ஓட்டுநர் இல்லாமல் தானாக ஓடிய லாரியால் பரபரப்பு.

262

ஜெயங்கொண்டத்தில் ஓட்டுநர் இல்லாமல் தானாக ஓடிய லாரியால் பரபரப்பு.

Lorry driven automatically without driver near Jayankondam.

ஜெயங்கொண்டம் பேருந்து நிலையம் அருகே சாலையோரம் நிறுத்தியிருந்த லாரி தானாக ஓடி கோயில் சுவரில் மோதி நின்றது. இதனால் ஒட்டுநர் மற்றும் பொது மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பேருந்து நிலை நுழைவு வாயில் முன்பு சாலையில் தனியார் பார்சல் சர்வீஸ் லாரியை நிறுத்திவிட்டு லாரியின் ஓட்டுநர் காமராஜ் (50) சுமை இறக்குபவர்களை அழைக்க சென்றார். அப்போது லாரி திடீரென தானாகவே நகர்ந்து எதிரே நின்ற பேருந்து மீது மோதி பின்னர் பேருந்து நிலையத்தின் உள்ளே வேகத்தடையை தாண்டி சென்று கொண்டிருந்தது.

வேப்பந்தட்டை அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை.

பெரம்பலூர் அருகே தாய், மகள் தற்கொலை.

அப்போது டிரைவர் இல்லாமல் வந்த லாரியை பார்த்த பொதுமக்கள், பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இந்த நிலையில் லாரியை நிறுத்த பஸ் ஓட்டுநர்கள் மற்றம் நடத்துனர்கள் லாரி சக்கரத்தில் கற்கள் மற்றும் கட்டைகள் மூலம் தடுக்கு பல்வேறு முயற்சியில் ஈடுபட்டும் பயனில்லாமல் எதிரே நின்ற ஆட்டோவில் மோதிவிட்டு ஆட்டோவுடன் சேர்த்து கோயிலின் சுவற்றில் மோதி லாரி நின்றது.

இதில் ஆட்டோ ஓட்டுநர்கள் ஆட்டோவை எடுக்க முயற்சித்தனர். அப்போது நின்ற ஆட்டோவில் ஒரு ஆட்டோவை மட்டும் நகர்த்தி விட்டனர். மற்றொரு ஆட்டோவை எடுப்பதற்குள் லாரி ஆட்டோவை சேர்த்து கோயில் சுவரில் மோதி நின்றது. அதிர்ஷ்டவசமாக ஆட்டோ ஓட்டுநர்கள் உயிர் தப்பினர்.

இச்சம்பவத்தால் ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இடது புறம் சற்ற லாரி நகர்ந்து பேருந்து நிலையத்திற்கு உள்ளே சென்றிருந்ததால் பேருந்துகள் சேதமடைவதுடன் பொதுமக்கள் மற்றும் பயணிகள் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும்.

tags: ariyalur

gulf-news-tamil
Leave a Reply

%d bloggers like this: