76 people were newly infected with corona

அரியலூர் மாவட்டத்தில் புதியதாக 76 பேருக்கு கொரோனா பாதிப்பு, ஒருவர் பலி

214

அரியலூர் மாவட்டத்தில் புதியதாக 76 பேருக்கு கொரோனா பாதிப்பு, ஒருவர் பலி.


Ariyalur News: In Ariyalur district, 76 people were newly infected with corona and one died.


அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் 76 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளதால், பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.

அரியலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 20 பேருக்கும், அரியலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 13 பேருக்கும், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 4 பேருக்கும், செந்துறை ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 8 பேருக்கும், தா.பழூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 7 பேருக்கும், ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 5 பேருக்கும், ஆண்டிமடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 13 பேருக்கும், ஜெயங்கொண்டம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 6 பேருக்கும் என மொத்தம் 76 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

Ariyalur News: 

இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,573 ஆக உயர்ந்துள்ளது. 1,156 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 402 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 361 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.

Keyword: Ariyalur




Leave a Reply

%d bloggers like this: