Government Medical College in Ariyaloor District

அரியலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி: இடம் தேர்வு

264

அரியலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி: இடம் தேர்வு – Government Medical College in Ariyaloor District.

அரியலூரில் அரசு கலைக்கல்லூரியின் அருகிலுள்ள காலி இடத்தில் புதிய அரசு மருத்துவக்கல்லூரி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மருத்துவக் கல்லூரி அமைக்கப்படவுள்ள இடத்தை அரசு தலைமைக் கொறடா தாமரை ராஜேந்திரன், அரியலூர் மாவாட்ட ஆட்சியர் ரத்னா தலைமையில் நேற்று (வெள்ளிக்கிழமை) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது அரசு தலைமை கொறடா கூறியதாவது:-

அரியலூர் அருகே தனியார் பேருந்துக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு கொடுத்த மக்கள்

அரியலூா் ஆட்சியர் அலுவலகத்தில் 3 போ் தீக்குளிக்க முயற்சி

அரியலூர் மாவட்டத்தில் மேல் சிகிச்சைக்காக அருகிலுள்ள மாவட்டங்களான திருச்சி, தஞ்சாவூர் மற்றும் சென்னை ஆகிய இடங்களுக்கு சென்று மருத்துவ பரிசோதைனை மற்றும் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. தற்போதுநமது மாவட்டத்திலே சிறப்பு வாய்ந்த மருத்துவக்கல்லூரி அமை உள்ளதால், அவசர சிகிச்சைகளுக்கோ, மேல் சிகிச்சைகளுக்கோ வெளி மாவட்டங்களுக்கு செல்லாமல் நமது மாவட்டத்திலே மருத்துவ சிகிச்சைகள் பெற்றுக் கொள்ளலாம்.

[the_ad id=”7251″]

அரியலூர் மாவட்ட பொதுமக்களின் நீண்ட நாள் கனவு திட்டமான அரசு மருத்துவக்கல்லூரி அமைக்க முதல் அமைச்சர் உத்தரவிட்டு, நிதி ஒதுக்கீடு செய்து ஆணையிட்டுள்ளார். அதன்படி 26 ஏக்கர் பரப்பளவில் ரூ.347 கோடி மதிப்பில் அரசு மருத்துவக்கல்லூரி 700 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை கட்டிடம், அலுவலகக் கட்டிடங்கள், குடியிருப்பு கட்டிடங்கள் ஆகியவை கட்டப்படவுள்ளது. தமிழக முதல்-அமைச்சர் விரைவில் அடிக்கல் நாட்டிய உடன் கட்டுமான பணிகள் தொடங்கி, விரைந்து முடிக்கப்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி பயன்பாட்டிற்கு வர உள்ளது என்று அவர் கூறினார்.

ஆய்வின்போது, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சந்திரசேகர், அரசு மருத்துவக்கல்லூரி தலைவர் முத்துக்கிருஷ்ணன், செயற்பொறியாளர் சிவக்குமார், உதவி செயற்பொறியாளர் காந்தரூபன், தலைமை மருத்துவர் ரமேஷ், தாசில்தார் சந்திர சேகரன் மற்றும் பொதுப்பணித்துறையினர், காவல்துறையினர், வருவாய்த்துறையினர் உள்பட பலர் உடனிருந்தனர்.

source - dailythanthi

[the_ad id="7250"]




Leave a Reply

%d bloggers like this: