Fishing festival again

மீண்டும் மீன்பிடி திருவிழா: கூட்டத்தை கலைத்த காவல்துறையினர். 

239

மீண்டும் மீன்பிடி திருவிழா: கூட்டத்தை கலைத்த காவல்துறையினர்.

அரியலூர் மாவட்டம், செந்துறை அடுத்த நக்கம்பாடி கிராமத்தில் உள்ள பெரிய ஏரியில் ஆண்டுதோறும் மீன்பிடித் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். ஊரடங்கு காரணமாக இந்த வருடம் இந்த மீன்பிடி திருவிழா நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்தது. இந்நிலையில், கடந்த 3-ம் தேதி மீன்பிடி திருவிழா நடைபெற்றது.

[the_ad id=”7251″]

இந்த மீன்பிடி திருவிழாவில் செந்துறை சொக்கநாதபுரம், வஞ்சினாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த நூற்றுக்கணக்கானவர்கள் வயது வித்தியாசமின்றி ஏரியில் இறங்கி மீன் பிடித்தனர். சமூக இடைவெளி இல்லாமல் நூற்றுக்கும் அதிகமானவர்கள் ஒரே இடத்தில் கூடியிருப்பது குறித்த தகவலறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு வந்த போலீஸாா் அந்த இடத்தில் குவிந்திருந்த பொதுமக்களைக் கலைந்து செல்லுமாறு வலியுறுத்தினர். இதனால் ஏமாற்றத்துடன் கிராம மக்கள் கலைந்து திரும்பிச் சென்றனர்.

[the_ad id=”7251″]

இந்நிலையில் நேற்று நக்கம்பாடி கிராமத்தில் உள்ள சிவன் கோவில் குளத்தில் திரளான பொதுமக்கள் இறங்கி  மீன்பிடித்தனர். இதனால் மீணடும் நக்கம்பாடி கிராமத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்த செந்துறை காவல்துறை ஆய்வாளர் ராஜ்குமார் மற்றும் திரளான காவலர்கள் திரண்டு சென்று மீன் பிடித்த பொதுமக்களை களைந்து போக சொல்லி போரானார்கள்.

[the_ad id=”7250″]




Leave a Reply

%d bloggers like this: