Corona for 46 people in Ariyalur district.

அரியலூர் மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா 

211

அரியலூர் மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா.


Ariyalur News: Corona for 46 people in Ariyalur district.

அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன்படி அரியலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 6 பேருக்கும், அரியலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 2 பேருக்கும், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 14 பேருக்கும், செந்துறை ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 7 பேருக்கும், தா.பழூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 4 பேருக்கும், ஆண்டிமடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் ஒருவருக்கும், ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 7 பேருக்கும், ஜெயங்கொண்டம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 5 பேருக்கும் என மொத்தம் 46 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,291 ஆக உயர்ந்துள்ளது. இதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். 995 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 283 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 144 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வரவேண்டியது உள்ளது.

keyword: Ariyalur




Leave a Reply

%d bloggers like this: