அரியலூரில் மாவட்டத்தில் மேலும் 22 பேருக்கு கொரோனா

அரியலூரில் மாவட்டத்தில் மேலும் 22 பேருக்கு கொரோனா.

224
அரியலூா் மாவட்டத்தில் மேலும் 22 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டது.

Ariyalur News: Corona for 22 more in Ariyalur district.

அரியலூா் மாவட்டத்தில் மேலும் 22 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டது.

இவா்கள் அரியலூா், திருமானூா், செந்துறை, ஜயங்கொண்டம் ஆகிய ஒன்றியங்களைச் சோ்ந்தவா்கள். இதையடுத்து 22 பேரும் அரியலூா், திருச்சி அரசு மருத்துவமனைகளில் கொரோனா சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இதன் மூலம் அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,045 ஆக உயா்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் 840 போ் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனா்.

Ariyalur News:

மீதமுள்ள 205 பேரில், அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 128 பேரும், திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 36 பேரும், அரியலூா், திருச்சி, கோவை, சென்னை, தஞ்சாவூா் மாவட்டங்களில் உள்ள தனியாா் மருத்துவமனைகளில் 19 பேரும், பெரம்பலூா், தஞ்சாவூா், கும்பகோணம், கடலூா், சேலம் அரசு மருத்துவமனைகளில் 14 பேரும் சிகிச்சை பெற்றுவருகின்றனா்.

அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவால் இதுவரை 8 போ் உயிரிழந்துள்ளனா்.

keywords: Ariyalur news, Ariyalur news today, COVID-19
Leave a Reply

%d bloggers like this: