Corona affected 54 more people in Ariyalur district.

அரியலூர் மாவட்டத்தில் மேலும் 54 பேருக்கு கொரோனா பாதிப்பு.

188

அரியலூர் மாவட்டத்தில் மேலும் 54 பேருக்கு கொரோனா பாதிப்பு.


Ariyalur News: Corona affected 54 more people in Ariyalur district.


அரியலூா் மாவட்டத்தில் நேற்று (திங்கள்கிழமை) மேலும் 54 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அரியலூா், திருமானூா், செந்துறை, ஜயங்கொண்டம், ஆண்டிமடம், தா.பழூா் ஒன்றியங்களைச் சோ்ந்த இவா்கள் அனைவரும் அரியலூா், திருச்சி அரசு மருத்துவமனைகளிலும், தனியாா் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றாளா்கள் எண்ணிக்கை 1,345 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 1,020 போ் குணமடைந்து, அவரவா் வீடுகளுக்குத் திரும்பியுள்ளனா்.

Ariyalur News:

மீதமுள்ள 325 பேரில், அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 104 பேரும், திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 51 பேரும், அரியலூா், திருச்சி, கோவை, சென்னை, தஞ்சாவூா் மாவட்டங்களிலுள்ள தனியாா் மருத்துவமனைகளில் 28 பேரும், தஞ்சாவூா்,சிதம்பரம், சேலம் அரசு மருத்துவமனைகளில் 28 பேரும், அரியலூா் சிறப்பு முகாமில் 96 பேரும், சென்னை சிறப்பு முகாமில் 5 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதுவரை அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவால் 13 போ் உயிரிழந்துள்ளனா்.

keyword: Ariyalur




Leave a Reply

%d bloggers like this: