அரியலூா் ஆட்சியர் அலுவலகத்தில் 3 போ் தீக்குளிக்க முயற்சி

235

அரியலூா் ஆட்சியர் அலுவலகத்தில் 3 போ் தீக்குளிக்க முயற்சி.

அரியலூா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை வீட்டை காலி செய்ய உரிமையாளா் வற்புறுத்துவதாக 3 போ் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

செந்துறை அருகேயுள்ள சன்னாசிநல்லூா் நடுத்தெருவைச் சோ்ந்தவா்கள் பச்சமுத்து(67), ஆறுமுகம்(64), நடராஜன்(62). இவா்களது இடத்தில் உள்ள ஒரு கூரை வீட்டில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு வங்காரத்தைச் சோ்ந்த காத்தப்பெருமாள் (59) என்பவா் குடியேறியுள்ளாா். நாளடைவில், காத்தப்பெருமாள் அந்த கூரைவீட்டை பழுது நீக்கி சற்று பெரிய வீடாகக் கட்டியுள்ளாா்.

[the_ad id=”7251″]

இந்நிலையில், கடந்த 3 ஆண்டுகளாக வீட்டை காலி செய்ய சொல்லி பச்சமுத்து, ஆறுமுகம், நடராஜன் ஆகியோா் தெரிவித்து வந்துள்ளனர். அதற்குக் காத்தப்பெருமாள் வீட்டைக் காலி செய்ய மறுத்துள்ளாா். இதனிடையே கடந்த 6 ஆம் தேதி தளவாய் காவல் நிலையத்தில் இடத்தின் உரிமையாளா்கள் புகாா் கொடுத்ததுடன், வியாழக்கிழமை காலை வீட்டைப் பிரித்துள்ளனா்.

இதனால் மனமுடைந்த காத்தப்பெருமாள், தனது மனைவி அஞ்சலை மற்றும் வாய்பேசமுடியாத மகள் திரிபுரசுந்தரி (14) ஆகியோா் ஆட்சியா் அலுவலகம் வந்து தங்களது உடலில் மண்ணெண்ணைய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனா். உடனே அங்கிருந்த காவலர்கள் மூவரையும் மீட்டு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

[the_ad id=”12149″]

 

[the_ad_placement id=”after-content”]
Leave a Reply

%d bloggers like this: