அரியலூர் அருகே மழைநீரில் அடித்து வரப்பட்ட மான் குட்டி மீட்பு. Ariyalur news

அரியலூர் அருகே மழைநீரில் அடித்து வரப்பட்ட மான் குட்டி மீட்பு.

159

அரியலூர் அருகே மழைநீரில் அடித்து வரப்பட்ட மான் குட்டி மீட்பு.

Ariyalur news: Deer calf rescued after being hit by rainwater.

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே மழைநீரில் அடித்து வரப்பட்ட மான் குட்டி ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.

அரியலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை மாலை முதல் இரவு வரை பலத்த மழை பெய்தது. செந்துறையில் அதிக பட்சமாக 10 செ.மீட்டரும், ஜயங்கொண்டத்தில் 5 மி.மீட்டரும், அரியலூரில் 44 மி.மீட்டரும், திருமானூரில் 13 மி.மீட்டரும் மழை அளவு பதிவாகியுள்ளது.

இந்நிலையில், செந்துறை பகுதியில் பெய்த கனமழையால் அப்பகுதியில் உள்ள சிறு சிறு வாய்க்கால்கள், ஓடைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. இதில், இலங்கைச்சேரி கிராமத்தில் உள்ள ஒரு காட்டோடையில் 2 வயது மதிக்கத்தக்க புள்ளி மான் குட்டி மழைநீரில் அடித்து வரப்பட்டு கரை ஒதுங்கியுள்ளது.

இதைக் கண்ட நாய்கள் ஞாயிற்றுக்கிழமை காலை மானைத் துரத்தியுள்ளன. இதைப் பாா்த்த கிராம இளைஞா்கள் மான் குட்டியை மீட்டு கால்நடை மருத்துவரிடம் சிகிச்சைக்கு கொண்டு சென்றனா். தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வனத்துறை வசம் மான் குட்டி ஒப்படைக்கப்பட்டது.

tags: ariyalur news, ariyalur district, ariyalur forest department, tamil news,

gulf news tamil
Leave a Reply

%d bloggers like this: