டால்மியா சிமெண்ட் ஆலையில் பிளாஸ்டிக் கழிவுகள் எரிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

202

டால்மியா சிமெண்ட் ஆலையில் பிளாஸ்டிக் கழிவுகள் எரிக்க ப்படுவதாக குற்றச்சாட்டு. 

டால்மியா சிமெண்ட் ஆலையில் பிளாஸ்டிக் கழிவுகள் எரிக்கப்படுவதால் பொதுமக்கள் குற்றம் சாட்டி லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் டால்மியா சிமெண்ட் ஆலை நிறுவனத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை எரிபொருளாக பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. அதற்காக திருப்பூர் உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளில் கழிவுகளை கொண்டு வந்து தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். இதனால் ஆலைகளில் இருந்து வெளியேறும் புகையால் பெண்கள் கர்ப்பிணிகள் என பலரும் கடுமையான மூச்சுத்திணறல், நெஞ்சு எரிச்சல், தொண்டையில் எச்சில் முழுங்க இயலாத நிலை என பல்வேறு உபாதைகளை சந்தித்து வருகின்றனர்.

தா.பழூர் அருகே வாலிபரை கத்தியால் குத்திய ஒருவர் கைது.

[the_ad id=”7251″]

இந்நிலையில் நேற்று நூற்றுக்கணக்கான லாரிகளில் வந்த கழிவுகளை கண்ட அப்பகுதி கிராம மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பிளாஸ்டிக்குகளை ஏற்றிக்கொண்டு அந்த லாரிகளை மறித்து கலோரிகளை எரிக்க கூடாது என எதிர்ப்புத் தெரிவித்து லாரிகளை சிறை பிடித்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது போலீசாரிடம் பொதுமக்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில் கலோரிகளை எரிக்கும் ஆலை நிர்வாகத்தின் செயல்பாடுகள் மிகவும் கண்டிக்கத்தக்கது. பணம் உங்களுக்கு நல்லா எங்களுக்கா எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் மேலும் பிளாஸ்டிக் கழிவுகளை சிமெண்ட் ஆலை நிர்வாகம் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் சுற்றுச்சூழல் நிர்வாகம் இந்த ஆலையில் ஆய்வு நடத்த வேண்டும்.

[the_ad id=”7251″]

மேலும் காற்று மாசுபாடு அதிகரிக்கும் சூல்நிலையில் குரானா வரும் வாய்ப்பு அதிகம் உண்டு எனவும் அச்சம் தெரிவித்தனர். ஆலையில் இருந்து புகை அளவுக்கு அதிகமாக வெளியேறுவதால் துணி கூட வைக்கமுடியவில்லை மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆலய நிர்வாகத்தினரின் செயலைக் கண்டு கொள்வதே இல்லை என்றனர்.

உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல்துறை போலீசார் உறுதி அளித்ததை அடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர். மேல் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்ல கல்லக்குடி போலீசார் மனு ஒன்றை எழுதி தரும்படி கேட்டுக் கொண்டனர். இதையடுத்து சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கிராம மக்களும் கோரிக்கைகளை மனுவாக எழுதி வருவதாக கூறினர்.

[the_ad id=”7250″]




Leave a Reply

%d bloggers like this: