விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம். Agricultural Workers

ஆண்டிமடத்தில் விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்.

169

ஆண்டிமடத்தில் விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்.

Agricultural Workers Union demonstration in Andimadam.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே ஆண்டிமடம் கடைவீதியில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களிடம் வங்கி மற்றும் தனியார் வங்கிகுழு கடன் நிறுவனங்கள் செய்யும் கட்டாய வசூல் தடுத்து நிறுத்தக்கோரியும், வழங்கிய கடன்களை தள்ளுபடி செய்திடவும், ஊரடங்கால் வேலையின்றி தவிக்கின்ற குடும்பங்களுக்கு ரூ 7 ஆயிரத்து 500 வீதம் மூன்று மாதத்திற்கு நிவாரணம் வழங்கவும், நூறு நாள் வேலைத்திட்டத்தை அனைத்து கிராம ஊராட்சிகளிலும் உடனே தொடங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆண்டிமடம் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் முருகன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் இளங்கோவன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு பேசினர்.

tags: ariyalur, tamil news
Leave a Reply

%d bloggers like this: