அரியலூர் அருகே மணல் திருட்டு: 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது.

332

அரியலூர் அருகே மணல் திருட்டு: 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது.

அரியலூர் மாவட்டம், தளவாய் அருகே உள்ள முல்லையூரை சேர்ந்தவர் பழனிவேல் (வயது 42), சன்னாசிநல்லூரை சேர்ந்தவர் பிச்சைபிள்ளை மகன் மதியழகன்(20). இவர்கள் 2 பேரும் தொடர்ச்சியாக சன்னாசிநல்லூர் பகுதியில் வெள்ளாற்றில் மணல் திருட்டில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் கடந்த 2-ந் தேதி மாலையில் இருவரும் வண்டியில் மணல் திருடிக்கொண்டு செந்துறை செல்வதாக கிடைத்த ரகசிய தகவலின் படி செந்துறை காவல் நிலைய துணை ஆய்வாளர் சுப்பிரமணியன் மற்றும் காவலர்கள் சேர்ந்து அவர்களை மடக்கிப்பிடித்தனர்.

[the_ad id=”7251″]

பின்னர் நடத்திய விசாரணையில், அவர்கள் 2 பேரும் மணல் திருடியதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர்.

இதுபோன்று தொடர் மணல் திருட்டில் ஈடுபட்டு வருவதால் இவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன், மாவட்ட ஆட்சியர் ரத்னாவிடம் பரிந்துரை செய்தார். அதன்பேரில் ஆட்சியர் ரத்னா கைது செய்யப்பட்டவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவிட உத்தரவிட்டார்.

[the_ad_placement id=”after-content”]

 

இதனை தொடர்ந்து இருவரும் திருச்சி மத்திய சிறையில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டனர்.

[the_ad id=”12149″]

 

[the_ad id=”7252″]
Leave a Reply

%d bloggers like this: