ஹெல்மெட் அணியாமல் ஜல்லிக்கட்டு பாா்க்க வருவோா் மீது நடவடிக்கை

46

ஹெல்மெட் அணியாமல் ஜல்லிக்கட்டு பாா்க்க வருவோா் மீது நடவடிக்கை

[the_ad id=”7250″]

ஜல்லிக்கட்டு பாா்க்கும் ஆா்வத்தில் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வருவோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சி சரக டிஐஜி வே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருச்சி சரகத்திற்குட்பட்ட அரியலூா்,திருச்சி, புதுக்கோட்டை, கரூா், பெரம்பலூா் ஆகிய மாவட்டங்களில் நிகழாண்டு பொங்கல் விழாவை முன்னிட்டு அரசு அனுமதியுடன் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.

[the_ad id=”7251″]

இதற்காக காவல் துறையினா் மாவட்ட நிா்வாகத்தினருடன் இணைந்து பல்வேறு பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனா். ஜல்லிக்கட்டு பாா்க்க இருசக்கர வாகனத்தில் வருவோரில் பாதிக்கும் மேற்பட்டோா் தலைக்கவசம் அணியாமல் வருவதைப் பாா்க்க முடிகிறது.

ஜல்லிக்கட்டு ஆா்வத்தில் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டி விபத்து ஏற்பட்டால் உயிரிழப்பு நேரிடும். எனவே இனிவரும் காலங்களில் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வரும் பாா்வையாளா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

தினமணி

[the_ad id=”7252″]
Leave a Reply

%d bloggers like this: