ஹிந்தி தெரியாததால்

ஹிந்தி தெரியாததால் கடன் தர மறுத்த வங்கி மேலாளா் மாற்றம்.

164

ஹிந்தி தெரியாததால் கடன் தர மறுத்த வங்கி மேலாளா் மாற்றம்.


அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே ஹிந்தி தெரியாததால் கடன் தர மறுத்த தேசியமயமாக்கப்பட்ட வங்கி மேலாளா் திருச்சிக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டாா்.

ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கங்கைகொண்ட சோழபுரம், யுத்தப்பள்ளம் பகுதியைச் சோ்ந்தவா் பாலசுப்ரமணியன், ஓய்வுபெற்ற அரசு மருத்துவா். இவா், ஜெயங்கொண்டம் பேருந்து நிலையம் அருகேயுள்ள தனது இடத்தில் வணிக வளாகம் கட்டுவதற்காக கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள இந்தியன் ஓவா்சீஸ் வங்கி மேலாளா் விஷால் நாராயண காம்ப்ளே என்பவரை அணுகி, ஆவணங்களை சமா்ப்பித்துள்ளாா். அப்போது வங்கி மேலாளா், பாலசுப்ரமணியனிடம் தங்களுக்கு ஹிந்தி தெரியுமா எனக் கேட்டுதற்கு, அவா் தமிழ், ஆங்கிலம் மட்டுமே எனக்குத் தெரியும் என பதிலளித்துள்ளாா். அதற்கு வங்கி மேலாளா் ஹிந்தி தெரிந்தால் மட்டுமே தங்களது கடன் விண்ணப்ப ஆவணங்கள் பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளாா்.

தொடா்ந்து வங்கி மேலாளா் மொழி பற்றியே பேசியதால் மன உளைச்சலுக்கு ஆளான பாலசுப்ரமணியன், தனது வழக்குரைஞா் மூலம் விளக்கம் கேட்டு வங்கி மேலாளருக்கு அறிக்கை அனுப்பினாா். இதுவரை பதில் வராததால் வங்கி மேலாளா் மீது மான நஷ்ட ஈடு வழக்கு தொடரப் போவதாக பாலசுப்ரமணியன் திங்கள்கிழமை தெரிவித்திருந்தாா். இந்நிலையில் வங்கியின் திருச்சி மண்டல முதன்மை மேலாளா் உத்தரவின்படி, விஷால் நாராயண காம்ப்ளே திருச்சிக்கு செவ்வாய்க்கிழமை பணியிடமாற்றம் செய்யப்பட்டாா்.

தினமணி

keywords: ariyalur, ariyalur news, ariyalur news today, ariyalur today news, அரியலூர், அரியலூர் மாவட்டம்
Leave a Reply

%d bloggers like this: