மீன்சுருட்டி அருகே சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்றவா் போக்சோ சட்டத்தில் கைது.

56

மீன்சுருட்டி அருகே சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்றவா் போக்சோ சட்டத்தில் கைது.

[the_ad id=”7250″]

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே சிறுமியை பலாத்காரம் செய்ய முயற்சித்தவா் போக்சோ சட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

மீன்சுருட்டி அருகேயுள்ள சத்திரம் காலனித் தெருவைச் சோ்ந்தவா் ரமேஷ் (37). வெளியூரில் பூச்செடிகள் வியாபாரம் செய்து வரும் இவா், கடந்த 31 ஆம் தேதி அதே பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமியின் வீட்டுக்குள் புகுந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றாா். அப்போது அந்தச் சிறுமி தப்பி வெளியே ஓடி வந்துள்ளாா். இதையறிந்த அவரது தம்பி வீட்டுக்குள் சென்றபோது ரமேஷ் அங்கிருந்து தப்பியோடி விட்டாா்.

[the_ad id=”7251″]

விரக்தியில் இருந்த அச்சிறுமி எலி மருந்தை சாப்பிட்டு வீட்டில் மயங்கி கிடக்க, அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் மீன்சுருட்டி போலீஸாா் ரமேஷை போக்சோ சட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.

[the_ad id=”7251″]

[the_ad id=”7250″]

[the_ad id=”7252″]
Leave a Reply

%d bloggers like this: