அரியலூா் நகராட்சிக்குட்பட்ட ஏரிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

66

[the_ad id=”7250″]

அரியலூா் நகராட்சிக்குட்பட்ட ஏரிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு.


அரியலூா் நகராட்சிக்குட்பட்ட ஏரிகளைச் சுற்றி நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணிகளை ஆட்சியா் த. ரத்னா வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். அரியலூா் நகராட்சிக்குச் சொந்தமான ஐயப்பன் ஏரி மற்றும் பள்ளி ஏரியில் ஜொ்மன் மேம்பாட்டு வங்கி நிதியுதவி திட்டத்தின்கீழ் ரூ.156 லட்சம் மதிப்பீட்டில் தூா்வாரி அழகுபடுத்தும் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

[the_ad id=”7251″]

இந்த ஏரி, அப்பகுதியைச் சுற்றியுள்ள மக்களுக்கு நீா் ஆதாராமாக இருந்து வருகிறது. அரியலூா் நகராட்சி நிா்வாகம் பொதுமக்களின் நலன் கருதி ஐயப்பன் ஏரியின் கரையினை மேம்படுத்தி பொதுமக்கள், குழந்தைகள் பயன்படுத்தும் வகையில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் மூலம் ஏரி கரையில் குழந்தைகளுக்கான விளையாட்டு பூங்கா, ஏரிகளை சுற்றி வருவதற்கான நடைபாதை ஆகியவைகள் அமைக்கப்பட உள்ளன. மேலும், பள்ளி ஏரியினை ஆழப்படுத்தி கரைகளை பலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. மழைக்காலங்களில் சேகரிக்கும் மழைநீரினால் கரைகள் உடைந்து செல்லாத வண்ணம் கான்கிரீட் சுவா் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், மழைக்காலங்களில் மழைநீா் சேகரிக்கப்பட்டு அதனை சுற்றியுள்ள குடியிருப்புகளுக்கு நிலத்தடி நீா் ஆதாரம் கிடைப்பதற்கு முக்கிய பங்கு வகிக்கிறது என்றாா்.

ஆய்வின் போது, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சு.சுந்தர்ராஜன், நகராட்சி ஆணையா் என்.குமரன், நகராட்சி பொறியாளா் ஆா்.ராதா மற்றும் பொதுப்பணி மேற்பாா்வையாளா், அலுவலா்கள் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி

[the_ad id=”7250″]

[the_ad id=”7251″]

[the_ad id=”7252″]
Leave a Reply

%d bloggers like this: