தாலிக்கு தங்கம் வழங்கும் விழா

அரியலூாில் ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் விழா நடைபெற்றது.

63

[the_ad id=”7250″]

அரியலூாில் ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் விழா நடைபெற்றது.


அரியலூா் நிா்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட சமூக நலத்துறை சாா்பில் ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவில், அரசு தலைமை கொறடா தாமரை எஸ். ராஜேந்திரன் கலந்து கொண்டு, 57 ஏழை பெண்களுக்கு தாலிக்குத் தங்கத்தை வழங்கிப் பேசியது:

[the_ad id=”7251″]

இந்த விழாவில், பள்ளி படிப்பு முடித்த 25 ஏழை பெண்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.6 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான நிதியுதவியும், பட்டப்படிப்பு முடித்த 32 ஏழை பெண்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.16 லட்சம் மதிப்பிலான நிதியுதவியும், தலா 8 கிராம் வீதம் ரூ.17 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பில் திருமாங்கல்யத்திற்கு தங்கமும் என ஆக மொத்தம் 57 ஏழை பெண்களுக்கு சமூக நலத்துறையின் மூலம் ரூ.39 லட்சத்து 35 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா் அவா். விழாவுக்கு ஆட்சியா் த.ரத்னா தலைமை வகித்தாா். ஜயங்கொண்டம் எம்எல்ஏ ராமஜெயலிங்கம் முன்னிலை வகித்தாா். மாவட்ட சமூக நல அலுவலா் அன்புகுலோரியா மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
[the_ad id=”12149″]
[the_ad id=”7252″]Leave a Reply

%d bloggers like this: