முகக்கவசம்

ஜெயங்கொண்டத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்!

123

ஜெயங்கொண்டத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்!


அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் கடைவீதியில் முகக்கவசம் அணியாத 32 பேருக்கு செவ்வாய்க்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.

ஜயங்கொண்டம் நகராட்சி ஆணையா் அறச்செல்வி அறிவுறுத்தலின் பேரில் சுகாதார ஆய்வாளா் சிவராமகிருஷ்ணன் தலைமையிலான குழுவினா் ஜயங்கொண்டம் கடைவீதி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, முகக்கவசம் அணியாத 32 பேரிடம் இருந்து தலா ரூ.200 வீதம் ரூ.6,400 அபராதம் வசூலித்தனா். நகராட்சி பணியாளா்கள் பாண்டியன், சம்பத் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி

keywords: ariyalur, ariyalur news, ariyalur news today, ariyalur today news, அரியலூர், அரியலூர் மாவட்டம்
Leave a Reply

%d bloggers like this: