செந்துறை அருகே மீன்பிடி திருவிழாவில் காணாமல் போன சமூக இடைவெளி

226

[the_ad id=”7250″]

செந்துறை அருகே மீன்பிடி திருவிழாவில் காணாமல் போன சமூக இடைவெளி.

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே நேற்று (புதன்கிழமை) மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இந்த மீன்பிடித் திருவிழாவில் கலந்துகொண்ட பொதுமக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் கூடியதால் காவல்துறையினர் கலைந்து போகச் செய்தனர்.

செந்துறை அடுத்த நக்கம்பாடி கிராமத்தில் உள்ள பெரிய ஏரியில் ஆண்டுதோறும் மீன்பிடித் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். ஊரடங்கு காரணமாக இந்த வருடம் இந்த மீன்பிடி திருவிழா நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்தது. இந்நிலையில், ஊரடங்கு உத்தரவைக் கருத்தில் கொள்ளாமல், மீன்பிடித் திருவிழாவை நடத்தக் கிராமத்தில் முடிவு செய்தனர். அதன்படி நேற்று (புதன்கிழமை) இந்தாண்டுக்கான மீன்பிடித் திருவிழா நடைபெற்றது.

[the_ad id=”7251″]

அரியலூர் அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல்: வாலிபர் கைது

ஆழ்துளை கிணறு அமைக்க 50 சதவீத விவசாய மானியம்

இந்த மீன்பிடி திருவிழாவில் செந்துறை சொக்கநாதபுரம், வஞ்சினாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த நூற்றுக்கணக்கானவர்கள் வயது வித்தியாசமின்றி ஏரியில் இறங்கி மீன் பிடித்தனர். சமூக இடைவெளி இல்லாமல் நூற்றுக்கும் அதிகமானவர்கள் ஒரே இடத்தில் கூடியிருப்பது குறித்த தகவலறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு வந்த போலீஸாா் அந்த இடத்தில் குவிந்திருந்த பொதுமக்களைக் கலைந்து செல்லுமாறு வலியுறுத்தினர். இதனால் ஏமாற்றத்துடன் கிராம மக்கள் கலைந்து திரும்பிச் சென்றனர்.

[the_ad id=”12149″]
Leave a Reply

%d bloggers like this: