செந்துறை அருகே அக்கா தம்பி குளத்தில் மூழ்கி பலி.

170

செந்துறை அருகே அக்கா தம்பி குளத்தில் மூழ்கி பலி.

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே பொன்குடிக்காடு கிராமத்தை சேர்ந்த குமார்- ஐஸ்வர்யா தம்பதிகளின் மகள் பிருந்தா (10) மகன் கிரிதரன் (8). இவர்கள் இருவரும் செந்துறையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்தனர். நேற்று மாலை அக்காவும் தம்பியும் வீட்டின் அருகே உள்ள அய்யனார் கோவில் வளாகத்தில் விளையாடிக்கொண்டு இருந்தனர்.

அப்போது மதிய வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பிருந்தா தனது தம்பியை அழைத்துக் கொண்டு குலத்திற்கு குளிக்க சென்றால். அப்போது அங்கு ஏற்கனவே ஆழமாக வெட்டப்பட்டு இருந்த பள்ளத்தில் வழுக்கி விழுந்த சிறுவன் கிரிதரன், தண்ணீரில் மூழ்கியுள்ளான் இதனைக்கண்ட பிருந்தா தம்பியை காப்பாற்ற முயன்றாள். இதில் 2 பேரும் தண்ணீரில் மூழ்கி உயிருக்கு போராடினர்.

இதனை பார்த்த அவ்வழியே அரசு பஸ்சை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் பேருந்தை ஓரமாக நிறுத்திவிட்டு கூச்சலிடவே அப்பகுதி மக்கள் திரண்டு, 2 பேரையும் குளத்தில் இருந்து மீட்டு பொன்பரப்பி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கே மருத்துவர்கள் யாரும் இல்லாத காரணத்தினால் அங்கிருந்து செந்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். செந்துறை அரசு மருத்துவமனைியல் செவிலியர்களும், மருத்துவ ஊழியர்களும் நீண்ட நேரம் போராடியும் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

அதனைத் தொடர்ந்து செந்துறை காவல் ஆய்வாளர் ராஜ்குமார், துணை காவல் ஆய்வாளர் சுப்பிரமணியன் ஆகியோர் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அக்கா, தம்பி குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பொன்குடிக்காடு கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Leave a Reply

%d bloggers like this: