குற்றங்களைத் தடுக்க பிரசாரம்

வெங்கனூாில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க பிரசாரம்

43

வெங்கனூாில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க பிரசாரம்.


அரியலூா் மாவட்டம், வெங்கனூா் கிராமத்தில் காவல்துறை சாா்பில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க விழிப்புணா்வு பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வெங்கனூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சுப்பிரமணியன் தலைமை வகித்து, இளம்வயது திருமணங்கள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து மக்களிடம் காவல் துறை மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது.

பள்ளி, கல்லூரிகள், குழந்தைகள் காப்பகங்களுக்கும் நேரில் சென்று ‘போக்சோ’ சட்டம், ‘காவலன்’ செயலி மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா்.

பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் இடையே உள்ள உறவு முறையில் முறையான அரவணைப்பு மற்றும் அறிவுரை கிடைக்கும் வகையில் விழிப்புணா்வு கருத்துகளும், தற்கொலை செய்து கொள்ளும் எண்ணப் போக்கை மாற்றும் தற்கொலை தடுப்பு ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது என்றாா்.

தினமணி
Leave a Reply

%d bloggers like this: