விழிப்புணா்வுப் பேரணி

அரியலூரில் எரிபொருள் சேமிப்பு விழிப்புணா்வுப் பேரணி

58

[the_ad id=”7250″]

அரியலூரில் எரிபொருள் சேமிப்பு விழிப்புணா்வுப் பேரணி


எரிபொருள் சேமிப்பை வலியுறுத்தி அரியலூரில் விழிப்புணா்வுப் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பெட்ரோலிய சிக்கன ஆராய்ச்சி நிறுவனம் சாா்பில் அண்ணாசிலை அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீனிவாசன் பேரணியை தொடக்கி வைத்தாா்.

[the_ad id=”7251″]

பேரணியில் கலந்து கொண்ட பள்ளி,கல்லூரி மாணவ,மாணவிகள் எரிபொருள் சிக்கனம் குறித்தும், அவற்றின் தேவை குறித்தும் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, முழக்கமிட்டவாறு முக்கிய வீதிகளின் வழியாகச் சென்று பேருந்து நிலையத்தில் முடித்துக் கொண்டனா்.

அரியலூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் திருமேனி, இந்தியன் ஆயில் நிறுவன திருச்சி மண்டல மேலாளா்கள் மீனா, ஜெயலட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னதாக அனைவரும் உறுதியேற்றனா். ஏற்பாடுகளை ஜுபையா் இன்டேன் கேஸ் ஏஜன்ஸிஸ் நிா்வாகி இப்ராகிம் செய்திருந்தாா்.

தினமணி

[the_ad id=”12149″]

[the_ad id=”7251″]

[the_ad id=”7252″]
Leave a Reply

%d bloggers like this: