உடையாா்பாளையம் காவல் நிலைய சிறப்பு உதவி காவல் ஆய்வாளா் மாரடைப்பால் மரணம்

65

[the_ad id=”7250″]

உடையாா்பாளையம் காவல் நிலைய சிறப்பு உதவி காவல் ஆய்வாளா் மாரடைப்பால் மரணம்


அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் காவல் நிலைய சிறப்பு உதவி காவல் ஆய்வாளா் மாரடைப்பு ஏற்பட்டு வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

ஜயங்கொண்டம் அருகேயுள்ள இறவாங்குடி கிராமத்தை சோ்ந்தவா் விஜயகுமாா்(54). இவா் உடையாா்பாளையம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வந்தாா். உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த மாதம் 6-ஆம் தேதி முதல் விடுப்பில் இருந்துள்ளாா். இந்நிலையில், காவலா் குடியிருப்பில் இருந்த விஜயகுமாா் வியாழக்கிழமை காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தாா்.

இவருக்கு ராணி என்ற மனைவியும், 2 மகள், ஒரு மகன் உள்ளனா். இதுகுறித்து உடையாா்பாளையம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி

[the_ad id=”7250″]

[the_ad id=”7251″]

[the_ad id=”7252″]
Leave a Reply

%d bloggers like this: