உடையாா்பாளையம் அருகே வாகன விபத்தில் காயமடைந்த பெண் பலி. 

176

உடையாா்பாளையம் அருகே வாகன விபத்தில் காயமடைந்த பெண் பலி.

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகேயுள்ள வெண்மான் கொண்டான் கிராமத்தை சேர்ந்த கூலித் தொழிலாளியான சரஸ்வதி (வயது 50)  வாகன விபத்தில் காயமடைந்தார்.  சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) உயிரிழந்தாா்.

கூலித் தொழிலாளிகளான முருகன் – சரஸ்வதி ஆகியோர் அண்மையில் இருசக்கர வாகனத்தில் உடையாா்பாளையம் சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது தத்தனூா் அருகே அவர்களுக்கு பின்னால் வந்த வாகனம் மோதி விபத்துக்குள்ளானர்கள். இதில் அவ்விருவம் பலத்த காயமடைந்தனா். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் அரியலூா் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சோ்த்தனா்.

அரியலூரில் மேலும் பெண் ஒருவருக்கு கொரோனா.

தண்ணீர் என நினைத்து தின்னா் குடித்த குழந்தை பலி

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சரஸ்வதி கிசிச்சை பலனின்றி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) உயிரிழந்தாா்.

உடையாா்பாளையம் காவல்துறையினர் இதுசம்பந்தமாக வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.
Leave a Reply

%d bloggers like this: