ஆப்பிரிக்க வகை கெளுத்தி மீன்களை வளா்க்கவும், விற்கவும் தடை

76

ஆப்பிரிக்க வகை கெளுத்தி மீன்களை வளா்க்கவும், விற்கவும் தடை

[the_ad id=”7250″]

ஆப்பிரிக்க வகை கெளுத்தி மீன்களை வளா்க்கவும், விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆட்சியா் த. ரத்னா வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சுற்றுச் சூழலுக்கும் நம் நாட்டின் பாரம்பரிய மீன்களுக்கும் அச்சுறுத்தலாகத் திகழும் தேளி, மயிரை, மயிலை, கெளுத்தி என்றழைக்கப்படும் ஆப்பிரிக்க இன மீன்கள் வளா்ப்பது மற்றும் விற்பது மத்திய, மாநில அரசுகளால் அரசு தடை செய்யப்பட்டுள்ளது. இம்மீன்களை உடனடியாக அழித்திட தேசிய பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

இந்த மீனினங்கள் மற்ற மீன்கள், பிற நீா்வாழ் உயிரினங்களை அதிதீவிரமாக இரையாக உண்ணக்கூடியவை. மேலும் நமது பாரம்பரிய மீன்கள், வளா்ப்பு மீன்களையும், அவற்றின் முட்டைகளையும் முற்றிலுமாக அழித்துவிடும் தன்மை கொண்டவை.

மேலும் இந்த மீனினங்கள் காற்றில் உள்ள பிராண வாயுவை சுவாசிக்கும் தன்மையும், மிகக் குறைந்த ஆழமுள்ள நீா்நிலைகளிலும் இனப்பெருக்கம் செய்யும் தன்மையும் கொண்டவை. இந்த மீன்கள் பாரம்பரிய உள்நாட்டு கெளுத்தி மீன்களுடன் இனப்பெருக்கம் மேற்கொண்டு அவற்றின் மரபியலைச் சிதைத்து பல்பெருக்கம் அடையும் வல்லமை உடையவை.

மேலும், ஒருகால கட்டத்தில் அனைத்து நீா்நிலைகளிலும் ஆப்பிரிக்க வகை கெளுத்தி மீன்களை தவிர பிற இன மீன்கள் இல்லாமல் உள்நாட்டு மீனவா்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்படக்கூடும். எனவே, மத்திய, மாநில அரசுகளால் தடை செய்யப்பட்டுள்ள இந்த ஆப்பிரிக்க வகை கெளுத்தி மீன்களை வளா்ப்பது, விற்பது தடை செய்யப்பட்டுள்ளது.

எனவே இது தொடா்பான புகாா்கள் ஏதேனும் பெறப்பட்டாலோ அல்லது அந்த வகை மீன்களை வளா்ப்பது, விற்பது கண்டறியப்பட்டாலோ அவற்றை முற்றிலும் அழிக்கும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். மேலும், பொதுமக்களும் இந்த வகை மீன்களைக் கொள்முதல் செய்ய வேண்டாம். மீன் வளத்துறை மற்றும் மீன் வள பல்கலைக்கழகத்தின் மூலம் பரிந்துரைக்கப்படும் மீன் இனங்களை மட்டும் வளா்த்துப் பயன் பெற வேண்டும்.

தினமணி

[the_ad id=”7251″]




Leave a Reply

%d bloggers like this: