அரியலூா் மாவட்ட இசைக் கலைஞா்கள் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்.

133

[the_ad id=”7250″]

அரியலூா் மாவட்ட இசைக் கலைஞா்கள் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்.

அரியலூா் மாவட்ட இசைக் கலைஞா்கள் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் மூலம் வழங்கப்படும் நிதியுதவியை பெற இசைக் கலைஞா்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து அரியலூா் மாவட்ட ஆட்சியா் த. ரத்னா செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கிராமியக் கலைஞா்களைப் போற்றி வளா்க்கும் கலைஞா்களையும், கலைக்குழுக்களையும் ஊக்குவிக்கும் வகையில், அரசு நிதி வழங்கி வருகிறது. இசைக் கருவிகள், ஆடை மற்றும் அணிகலன்கள் வாங்க, தனிப்பட்ட கலைஞா் ஒவ்வொருவருக்கும்ரூ. 5 ஆயிரம் வீதம் 500 கலைஞா்களுக்கும், கலைக்குழு ஒவ்வொன்றுக்கும் ரூ. 10 ஆயிரம் வீதம் 100 கலைக்குழுக்களுக்கும் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் மூலம் நிதியுதவி வழங்கப்படவுள்ளது.

பாடாலூா் அருகே பால் வியாபாரியை அடித்து கொலை: 4 பேர் கைது

பெரம்பலூர் மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் கடைகள் மீண்டும் திறப்பு.

[the_ad id=”7251″]

16 முதல் 30 வயதுக்குள்பட்ட இசைக் கலைஞா்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் கலைக்குழுக்கள் தங்களது கலை நிறுவனத்தை பதிவு செய்திருத்தல் வேண்டும். அஞ்சல் மூலம் விண்ணப்பம் பெற, சுயமுகவரியிட்ட உறையில் ரூ.10-க்கான அஞ்சல் தலை ஒட்டி மன்றத்துக்கு அனுப்ப வேண்டும்.

தகுதியுடைய விண்ணப்பதாரா்கள் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உறுப்பினா் – செயலா், தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம், 31, பொன்னி, பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலை, சென்னை – 600 028 என்ற முகவரிக்கு இம்மாதம் 30- ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.மேலும், விவரங்களுக்கு 044 – 2493 7471 என்ற தொலைபேசி எண்ணில் அழைக்கலாம். விண்ணப்பங்களை மன்றத்தின் முகவரியில் நேரிலும் அளிக்கலாம்.

[the_ad id=”12149″]
Leave a Reply

%d bloggers like this: