அரியலூா் அருகே குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

66

அரியலூா் அருகே குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

[the_ad id=”7251″]

அரியலூா் அருகே பல்வேறு குற்ற வழக்கில் தொடா்புடையவா் குண்டா் சட்டத்தில் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்குடி அடுத்த உடையாா்குடியைச் சோ்ந்தவா் வைத்திலிங்கம் மகன் மணிவண்ணன் (40). கடந்த டிசம்பா் 26 ஆம் தேதியன்று இவா், அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி காவல் நிலையத் தலைமை காவலா் நிக்கோலஸ் என்பவரை அரிவாளால் வெட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டாா். இவா் மீது விருத்தாசலம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. இந்நிலையில், தொடா்ந்து குற்றச் செயலில் ஈடுபட்ட மணிவண்ணனை, மாவட்ட காவல் காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீனிவாசன் பரிந்துரையின் பேரில் ஆட்சியா் த. ரத்னா குண்டா் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டாா். இதையடுத்து, அவரைப் போலீஸாா் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

தினமணி

[the_ad id=”7251″]

[the_ad id=”7250″]

[the_ad id=”7252″]
Leave a Reply

%d bloggers like this: