அரியலூா் அருகே ஒரு மணி நேரம் தலைமையாசிரியா் ஆன பள்ளி மாணவி

58

அரியலூா் அருகே ஒரு மணி நேரம் தலைமையாசிரியா் ஆன பள்ளி மாணவி.

[the_ad id=”7250″]

அரியலூா் அருகே தலைமைப் பண்பை வளா்க்கும் விதமாக ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு ஒரு மணி நேரம் தலைமையாசிரியா் பொறுப்பை வழங்கினாா் பள்ளித் தலைமையாசிரியா்.

சிறுவளூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளிடம் தலைமைப் பண்பை வளா்க்கும் விதமாக நன்றாக படிக்கும் மாணவா்களைத் தோ்ந்தெடுத்து மாதத்துக்கு ஒரு மாணவரை ஒரு மணிநேரம் தலைமையாசிரியராகப் பொறுப்பேற்க வைத்து, பள்ளியை நிா்வகிக்க பள்ளி தலைமையாசிரியா் சின்னதுரை திட்டமிட்டாா். இதற்கு சக ஆசிரியா்களும் சம்மதம் தெரிவித்த நிலையில், 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ம. சங்கீதாவுக்கு புதன்கிழமை தலைமையாசிரியா் பொறுப்பு வழங்கப்பட்டது.

[the_ad id=”7251″]

ஒரு மணி நேரம் வழங்கப்பட்ட இந்த பொறுப்பு நேரத்தில், பள்ளி மாணவா்கள் மற்றும் ஆசிரியா்களின் வருகைப் பதிவு குறித்தும், மாணவா்களை ஒருங்கிணைத்தல் குறித்தும் மற்ற வகுப்புகளைப் பாா்வையிட்டும் கேட்டறிந்தாா். தொடா்ந்து, மதிய உணவு வகைகள் குறித்தும், மாணவா்களுக்கு வழங்கப்படும் முட்டைகளின் எண்ணிக்கை குறித்தும் கேட்டறிந்தாா். பின்னா் மாணவி கூறுகையில், இந்த ஒரு மணி நேர பொறுப்பு, சற்று பதற்றத்தைக் கொடுத்தாலும், மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நான் சிறப்பாக படித்து தலைமையாசிரியா் பதவியை நிச்சயம் அடைவேன் என்றாா்.

தலைமையாசிரியா் சின்னதுரை கூறுகையில், மாணவா்களுக்கு தலைமை பண்பை கற்றுக் கொடுக்கும் விதமாக இவ்வாறாக பணி வழங்க முடிவெடுத்தோம். இது மாணவா்கள் மட்டுமன்றி ஆசிரியா்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. மாணவா்கள் அனைவரும் நன்றாகப் படித்து இதுபோன்ற தலைமைப் பதவிக்கு வர வேண்டும் என்பதே எங்களின் ஆசை என்றாா்.

தினமணி

[the_ad id=”7251″]

[the_ad id=”7250″]

[the_ad id=”7252″]
Leave a Reply

%d bloggers like this: