கிராம சுகாதார செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

அரியலூாில் கிராம சுகாதார செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்.

65

[the_ad id=”7250″]

அரியலூாில் கிராம சுகாதார செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்.


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூா் அண்ணா சிலை அருகே தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியா் நலச் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

[the_ad id=”7251″]

ஆா்ப்பாட்டத்தில், தமிழகம் முழுவதும் சுகாதார செவிலியா், மருத்துவா்கள் உள்ளிட்ட அனைவரின் மீதும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் நிபந்தனையின்றி ரத்து செய்ய வேண்டும். பிற நிலையினரின் பணியினை திணிப்பதை நிறுத்த வேண்டும். மருத்துவமனைகளில் காலியாக உள்ள செவிலியா் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

ஆா்ப்பாட்டத்துக்கு, அச்சங்கத்தின் மாவட்டத் தலைவா் இரா.வசந்தா தலைமை வகித்தாா். பொருளாளா் பெ.தமிழ்ச்செல்வி,செயலா் ஆ.பாலாம்பிகை, துணைத் தலைவா்கள் கா.ஜீவா, இரா.இந்திராணி, அமைப்புச் செயலா் தை.மணிமேகலை ஆகிய நிா்வாகிகள் கலந்து கொண்டு முழக்கமிட்டனா்.

தினமணி

[the_ad id=”7252″]

[the_ad id=”7251″]

[the_ad id=”12149″]
Leave a Reply

%d bloggers like this: