அரியலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் 13,947 விண்ணப்பங்கள்.

85

[the_ad id=”7250″]

அரியலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் 13,947 விண்ணப்பங்கள்.


அரியலூர் மாவட்டத்தில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் தொடர்பாக அலுவலர்கள், அனைத்து கட்சி பிரமுகர்களுடனான ஆய்வு கூட்டம் வாக்காளர் பட்டியலுக்கான பார்வையாளரான பதிவுத்துறை தலைவர் ஜோதி நிர்மலாசாமி தலைமையில், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா முன்னிலை வகித்தார். அப்போது பதிவுத்துறை தலைவர் ஜோதி நிர்மலாசாமி பேசுகையில், அரியலூர் மாவட்டத்தில் 2,51,127 ஆண் வாக்காளர்களும், 2,52,612 பெண் வாக்காளர்களும், 7 இதர வாக்காளர்களும் என மொத்தம் 5,03,746 வாக்காளர்கள் உள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் நடந்த வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த சிறப்பு முகாம்களில் படிவம் 6-ல் பெயர் சேர்த்தலுக்காக 12,357 விண்ணப்பங்களும், படிவம் 7-ல் பெயர் நீக்கம் செய்வதற்கு 266 விண்ணப்பங்களும், படிவம் 8-ல் திருத்தம் செய்வதற்கு 756 விண்ணப்பங்களும் மற்றும் படிவம் 8 ஏ-ல் முகவரி மாற்றம் செய்வதற்கு 565 விண்ணப்பங்களும் என மொத்தம் 13,947 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, ஆய்வு செய்து வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது.

[the_ad id=”7251″]

அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் தன்னார்வலர்கள் 18-வயது நிரம்பிய புதிய வாக்காளர்களை, வாக்காளர்களாக சேர்க்க தீவிர முயற்சி மேற்கொள்ள வேண்டும். எந்த ஒரு வாக்காளர்களின் பெயரும் விடுபடாமல் சேர்க்க வேண்டும் என்றார். மேலும் அவர் அரியலூர் மாவட்டம் 18-வயது நிரம்பிய புதிய வாக்காளர்களை சேர்க்கையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்று பாராட்டினார்.

இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அதிகாரி பொற்கொடி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரவிச்சந்திரன், கோட்டாட்சியர்கள் பாலாஜி, பூங்கோதை, தாசில்தார்கள் குமரய்யா, கதிரவன், கலைவாணன், தேர்தல் தாசில்தார்கள் சந்துரு, கண்ணன் மற்றும் தேர்தல் பிரிவு பணியாளர்கள், அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

[the_ad id=”12149″]Leave a Reply

%d bloggers like this: