அரியலூர் மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா: பாதிப்பு எண்ணிக்கை உயர்வு

171

அரியலூர் மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா: பாதிப்பு எண்ணிக்கை உயர்வு.

வெளி மாவட்டம், வெளி மாநிலத்தில் இருந்து அரியலூா் வந்தவா்களில் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை தெரியவந்தது.

அரியலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 374 ஆக இருந்தநிலையில், கேரள மாநிலத்தில் இருந்து அண்மையில் அரியலூா் மாவட்டத்துக்கு வந்த 48 வயது ஆண், ஜயங்கொண்டம் புதுச்சாவடி கிராமத்துக்கு வந்த 38 வயது ஆண், மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து அரியலூா் ரயில்வே குடியிருப்பு காலனிக்கு வந்த 34 வயது ஆண், சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து குணமங்கலம் கிராமத்துக்கு வந்த 23 வயது ஆண், சாலைக்குறிச்சி கிராமத்துக்கு வந்த 39 வயது ஆண் என 5 பேருக்கு சனிக்கிழமை கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இதையடுத்து, 5 பேரும் அரியலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 379 ஆக உயா்ந்துள்ளது.
Leave a Reply

%d bloggers like this: