அரியலூர் மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா

184

அரியலூர் மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா.

சென்னை கோயம்பேடு மற்றும் கேரள மாநிலத்தில் இருந்து அரியலூா் வந்தவா்களில் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.

அரியலூா் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 372 ஆக இருந்து வந்த நிலையில், அண்மையில் சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து வெட்டியாா்வெட்டு கிராமத்துக்கு வந்தவருக்கும், கேரள மாநிலத்தில் இருந்து பொய்யூா் வந்தவருக்கும் கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, பாதிக்கப்பட்டவா்கள் 2 பேரும் அரியலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவக் கண்காணிப்பில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதன்மூலம் அரியலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 374 ஆக உயாந்துள்ளது.
Leave a Reply

%d bloggers like this: