அரியலூர் மாவட்டத்தில் மேலும் இருவருக்கு கொரோனா.

209

அரியலூர் மாவட்டத்தில் மேலும் இருவருக்கு கொரோனா.

அரியலூர் மாவட்டத்தில் மேலும் இரண்டு நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது  நேற்று (வியாழக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இருவதும் சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து அரியலூா் வந்தவர்களாவர்.

அரியலூா் மாவட்டத்தில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 370 ஆக இருந்தது. இந்த  நிலையில் சமீபத்தில் கோயம்பேடு சந்தையில் இருந்து செந்துறை அடுத்த நமங்குணம் வந்த இரண்டு நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று (வியாழக்கிழமை) நடந்த பரிசோதனையில் உறுதியானது. இதைதொடர்ந்து, பாதிக்கப்பட்ட இருவரையும் அரியலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவக் கண்காணிப்பில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

செந்துறை அருகே அக்கா தம்பி குளத்தில் மூழ்கி பலி.

அரியலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 370ல-ல் இருந்து 372 ஆக உயா்ந்துள்ளது.
Leave a Reply

%d bloggers like this: