அரியலூர் அருகே மது விற்ற 2 பெண்கள் கைது. 

அரியலூர் அருகே மது விற்ற 2 பெண்கள் கைது.

284

அரியலூர் அருகே மது விற்ற 2 பெண்கள் கைது.

2 women arrested for selling liquor near Ariyalur.

அரியலூர் அருகே, விக்கிரமங்கலம் காவல் துணை ஆய்வாளர் சரத்குமார் தலைமையிலான காவலர்கள் கோவிந்தபுத்தூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அப்பகுதியில் மது விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின்படி கோவிந்தபுத்தூர் மேலத்தெருவை சேர்ந்த ராமர் என்பவரது மனைவி பூங்கோடி (37) என்பவரது வீட்டில் சோதனை செய்தனர்.

அப்போது அங்கு அவர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரிய வந்தது. இதையடுத்து பூங்கோடியை காவலர்கள் கைது செய்தனர்.

பெரம்பலூர் அருகே சரக்கு ஆட்டோ, பைக் மோதி வாலிபர் பலி.

இதேபோல் உடையார்பாளையம் காவல் துணை ஆய்வாளர் மாசிலாமணி தலைமையிலான காவலர்கள் நேற்று தத்தனுர் குடிக்காடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த வளர்மதி (40) என்பவர் அப்பகுதியில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரிய வந்தது.

இதுகுறித்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து வளர்மதியை கைது செய்து அவரிடம் இருந்த 20 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

tags: ariyalur, perambalur
Leave a Reply

%d bloggers like this: