அரியலூர் அருகே சுரங்கத்தில் தேங்கியிருந்த நீரில் மூழ்கி மாணவா் பலி

314

அரியலூர் அருகே சுரங்கத்தில் தேங்கியிருந்த நீரில் மூழ்கி மாணவா் பலி.

அரியலூா் அருகேயுள்ள தெற்கு சீனிவாசபுரத்தைச் சோந்தவா் அழகுதுரை மகன் பாலசுப்பிரமணியன் (19). தாமரைக்குளத்தில் உள்ள ஐடிஐ-யில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் இவர், சனிக்கிழமை மாலை கல்லங்குறிச்சி பகுதியில் உள்ள அரசு சிமென்ட் ஆலைக்குச் சொந்தமான காலாவதியான சுண்ணாம்புக்கல் சுரங்கத்தில் தேங்கியுள்ள நீரில் குளிக்கச் சென்றுள்ளாா்.

சுரங்கத்தின் ஆழமான பகுதிக்குச் சென்ற பாலசுப்பிரமணியனின் கால் கற்கள் இடையே சிக்கிக் கொண்டதில் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கயாலாபாத் போலீஸாா், சடலத்தை மீட்டு அரியலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Leave a Reply

%d bloggers like this: