அரியலூர் அருகே இடப்பிரச்சனையில் தந்தையை அடித்துக் கொன்ற மகன்

268

அரியலூர் அருகே இடப்பிரச்சனையில் தந்தையை அடித்துக் கொன்ற மகன்.

அரியலூர் அடுத்த அஸ்தினாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லபாண்டியன்(60). விவசாயியான இவர் தனக்கு சொந்தமான 30 சென்ட் இடத்தை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அடமானம் வைத்து அவரது நண்பரான ஆட்டுவியாபாரி சாமிதுரை என்பவருக்கு பணம் கொடுத்துள்ளார்.

இந்த விசயம் செல்லபாண்டியன் மகன் செல்வக்குமார்(30) கவனத்துக்கு வந்துள்ளது.

இதனையடுத்து, சாமிதுரையிடம் கொடுத்த பணத்தை பெற்று அடமானம் வைத்த இடத்தை மீட்கும் படி செல்வகுமார் தனது தந்தை செல்லபாண்டியனிடம் வெள்ளிக்கிழமை மாலை கூறியுள்ளார். இதில், இருவருக்கும் வாய்தகராறு ஏற்பட்டு அடிதடியில் முடிந்துள்ளது. அப்போது, வீட்டில் இருந்த உலக்கையால் செல்லபாண்டியனை செல்வகுமார் தாக்கியுள்ளார்.

இதில் தலையில் பலத்த காயமடைந்த செல்லபாண்டியன் தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு கிசிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தார். இது குறித்து கயர்லாபாத் காவல்துறையினர் கொலை வழக்காக பதிவு செய்து செல்வகுமாரை கைது செய்தனர்.
Leave a Reply

%d bloggers like this: