அரியலூருக்கு வரும் நபர்கள்

அரியலூருக்கு வரும் நபர்கள் குடும்பத்தினர்களுடன்  7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர்: ஆட்சியர் எச்சரிக்கை

409

அரியலூருக்கு வரும் நபர்கள் குடும்பத்தினர்களுடன்  7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர்: ஆட்சியர் எச்சரிக்கை.

தகவல் தெரிவிக்காமல் அரியலூருக்கு வரும் நபர்கள் அவர்களது குடும்ப உறுப்பினர்ளுடன் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று  மாவட்ட அரியலூர் மாவட்ட ஆட்சியர்   ரத்னா எச்சரிக்கை செய்துள்ளார்.

People who come to Ariyalur will spend 7 days in isolation with their families

இது சம்பந்தமாக ஆட்சியர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பாதாவது:-

தமிழகம் முழுவதும் கொரோனா நோய்த் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து அரியலூர் மாவட்டத்திற்கு வருகை புரியும் நபர்கள் தனிமைப்படுத்தும் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு உரிய மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, 7 நாட்கள் தனிமைப்படுத்துதலுக்குப் பின்பு மருத்துவ பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் மாவட்ட நிர்வாகத்திற்குத் தெரியாமல் வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து அரியலூர் மாவட்டத்திற்கு வரும் அனைவரும் மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு தந்து தனிமைப்படுத்துதல் முகாமில் தங்கி மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு தகவல் அளிக்காமல் எவரேனும் வந்து அதனை மாவட்ட நிர்வாகம் கண்டறிந்தால், அவர்கள் மட்டுமல்லாது அவர்களின் குடும்பம் உறுப்பினர்களையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, குடும்ப உறுப்பினர்களும் 7 நாட்கள் தனிமைப்படுத்துதல் முகாம்களில் தங்க வைக்கப்படுவார்கள் என்று அவர் அதில் கூறியுள்ளார்.

tag: ariyalur

gulf tamil news
Leave a Reply

%d bloggers like this: