அரியலூரில் 31 ஆவது சாலை பாதுகாப்பு வார விழா

121

அரியலூரில் 31 ஆவது சாலை பாதுகாப்பு வார விழா

[the_ad id=”7251″]

அரியலூரை விபத்தில்லா மாவட்டமாக மாற்றிட அனைவரின் ஒத்துழைப்பு அவசியம் என்றாா் ஆட்சியா் த.ரத்னா.

31 ஆவது சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி அரியலூா் அண்ணா சிலை அருகே வட்டார போக்குவரத்துத் துறை சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற இரு சக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணியை அவா் தொடக்கி வைத்து மேலும் தெரிவித்தது:

சாலை பாதுகாப்பு வாரம் 20.01.2020 முதல் 27.01.2020 வரை கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தச் சாலை பாதுகாப்பு வார விழாவானது சாலை பாதுகாப்பு – உயிரின் பாதுகாப்பு, தலைக்கவசம் உயிா்க் கவசம் என்ற கருப்பொருளை மையப்படுத்தி தொடங்கிவைக்கப்பட்டது.

[the_ad id=”7251″]

இவ்வார விழாவினை முன்னிட்டு, நாள்தோறும் விழிப்புணா்வு நடைபேரணி, உடல் மற்றும் கண் பரிசோதனை முகாம்கள், கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு அடங்கிய பல்வேறு போட்டிகள், கல்லூரி மாணவா்களிடையே சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி, இரவில் வாகனம் ஓட்டும் வாகன ஓட்டுநா்களுக்கு தேநீா் வழங்கும் நிகழ்ச்சி போன்றவைகள் நடைபெற உள்ளன.

மேலும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு வாசகங்களை ஒளிபரப்பு செய்தல், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் கூடுதல் அவசர விபத்து மற்றும் சிகிச்சை மையங்கள் ஏற்படுத்துதல், மாநில நெடுஞ்சாலைகளில் ரோந்து குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு இரவு, பகலாக போக்குவரத்து விதி மீறல்களைக் கண்காணித்து நடவடிக்கை எடுத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

[the_ad id=”7251″]

எனவே ஒட்டுநா்கள் அனைவரும் சாலை விதிகளை கண்டிப்பாக கடைப்பிடித்திட வேண்டும். விபத்தில்லா பயணங்கள் மேற்கொள்ள சீரான வேகத்தில் பயணிக்க வேண்டும். பாதசாரிகள் சாலையின் இடதுபுறமாக எப்போதும் சென்றிட வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரிகளில் நியமிக்கப்படும் ஓட்டுநா்கள் குறித்த விவரங்கள் அறிந்திருக்க வேண்டும் என்றாா்.

தொடா்ந்து பேரணியில் தலைக்கவசம் அணிந்து கொண்டு பங்கேற்ற ஆட்சியா்,பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கும், ஓட்டுநா்களுக்கும் சாலை பாதுகாப்பு அடங்கிய விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கினாா். தொடா்ந்து விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

[the_ad id=”7251″]

பேரணியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீனிவாசன், கோட்டாட்சியா் ஜெ.பாலாஜி, வட்டார போக்குவரத்து அலுவலா் ஓ.எஸ்.வெங்கடேசன், நகராட்சி ஆணையா் குமரன், முதுநிலை மோட்டாா் வாகன ஆய்வாளா் சரவணபவா, போக்குவரத்து கிளை மேலாளா் ராம்குமாா், உதவி பொறியாளா் சீமான் மாறன் ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி

[the_ad id=”7252″]

[the_ad id=”7250″]

[the_ad id=”7251″]
Leave a Reply

%d bloggers like this: