அரியலூரில் மேலும் பெண் ஒருவருக்கு கொரோனா.

163

அரியலூரில் மேலும் பெண் ஒருவருக்கு கொரோனா.

அரியலூரில் மேலும் பெண் ஒருவருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து அரியலூா் வந்தவா்களில், பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சுகாதாரத் துறையினர் உறுதிசெய்தனர்.

அரியலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நிலவரப்படி கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 379 ஆக இருந்தது. தற்போது, சென்னையில் இருந்து அரியலூா் மாவட்டத்திலுள்ள குவாகம் கிராமத்துக்கு வந்த 53 வயது பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதியானது. இதனை தொடர்ந்து, அந்த நபரை அரியலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா்.

தண்ணீர் என நினைத்து தின்னா் குடித்த குழந்தை பலி

அரியலூர் அருகே சுரங்கத்தில் தேங்கியிருந்த நீரில் மூழ்கி மாணவா் பலி

தற்போது அரியலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 380 ஆக உயா்ந்துள்ளது.
Leave a Reply

%d bloggers like this: