அரியலூரில் அரசு சிமெண்ட் ஆலையில் வேலை கேட்டு போராட்டம்.

222

அரியலூரில் அரசு சிமெண்ட் ஆலையில் வேலை கேட்டு போராட்டம்.

அரியலூரில் அரசு சிமெண்ட் ஆலையில் வேலை கேட்டு போராட்டம். அரியலூர் அரசு சிமெண்ட் ஆலைக்கு நிலம் கொடுத்த விவசாயிகள் வேலை கேட்டு போராட்டம். அரியலூர் அடுத்த கயர்லாபாத்திலுள்ள அரசு சிமெண்ட் ஆலைக்கு சுண்ணாம்புக்கல் சுரங்கம் அமைப்பதற்காக செந்துறை அடுத்த ஆனந்தவாடி கிராம விவசாயிகள் தங்களது 161 ஏக்கர் நிலத்தை குறைந்த விலைக்கு 1982 ஆம் ஆண்டு கொடுத்துள்ளனர்.

அந்த சமயத்தில் இருந்த அரசு சிமெண்ட் ஆலை நிர்வாகம் நிலம் அளித்த விவசாயிகள் குடும்பத்தில் ஒருவருக்கு சிமெண்ட் ஆலையில் வேலை வழங்கப்படும் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை அரசு சிமெண்ட் ஆலை நிர்வாகம் அவர்களது குடும்பத்தினருக்கு வேலை வழங்கவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் தங்களுக்கான வேலை கேட்டு பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று ஆனந்தவாடி சுண்ணாம்புக் கல் சுரங்கத்தில் பணி தொடங்க உள்ளதாக கிடைத்த தகவலையடுத்து நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் அங்கு ஒன்றுகூடினர். தகவலறிந்த மாவட்ட எஸ்பி சீனிவாசன் மூன்று டிஎஸ்பிக்கள் தலைமையில் சுமார் 200 காவலர்கள் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். மேலும் கோட்டாட்சியர் பூங்கோதை, வட்டாட்சியர் முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை. மேலும், ஏற்கனவே கடந்தாண்டு நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் நிலம் கொடுத்தவர்களில் வேலைக்கு தகுதியான 55 பேர் மட்டுமே உள்ளனர். அவர்களுக்கு வேலை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

அதனால் அந்த 55 பேரை மட்டும் வாகனம் மூலம் அரியலூர் சிமெண்ட் ஆலைக்கு அழைத்துவந்து அரசு அதிகாரிகள் ஆலை நிர்வாகிகள் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Leave a Reply

%d bloggers like this: